உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 சொர்க்கவாசல் மதி: என்னடா இது, வம்புக்காரனாகி விட்டாய்! இன்பத்துக்கு ஒரு உதாரணம் அது. வாலி: காதலன் காணும் இன்பத்தை மட்டும்தான் இன்பம் என்று கூறுகிறீரா என்கிறேன்? மதி: (முகமலர்ச்சியுடன்) பத்தியுள்ளவனடா நீ. தம்பி! இன்பம் ஒவ்வொருவருக்கு, ஒவ்வொரு சமயத்திலே, ஒவ் வொரு விதத்திலே கிடைக்கிறது. குழந்தையின் மழலை தாய்க்கு இன்பம், காதல் மொழி உன் போன்ற வாலிபனுக்கு இன்பம், வீரனுக்கு வெற்றி இன்பம் இன்னமும் கூறவா? வாலி: வேண்டாம்-பாடு. தம்பி மதி பாடவா? இசையிலே இன்பம் தேடுகிறாயா வாவி : இசையில் மட்டுமல்ல; உன் பேச்சு, பார்வை எல்லாமே இன்பம் தருவதாகத்தான் இருக்கிறது. இந்த இன்பத்தை நான் அரண்மனையிவே (உடனே பேச்சை வாலிபன் தயக்கத்துடன் நிறுத் திக் கொள்கிறான்.) மதி: அரண்மனை வாசியா? வாலி: (திடுக்கிட்டு) ஆமாம். அரண்மனைச் சேவகன். மதி: ஓஹோ! அதனால்தான் அலங்காரம் இருக்கிறது. உன் உடையிலே; குறும்பு இருக்கிறது, உன் பேச்சிலே (வாலிபன் பூரிப்படைந்து வாலி: என் மொழியிலே குறும்பா இருக்கிறது? மதி: ஆமாம். ஆனால் விழியிலோ வாலி: (குழைந்து) விழியிலே... [மதிவாணன் வாலிபன் அருகே சென்று, அவன் முகத்தை தன் இரு கரங்களிலும் பிடித்துக் கொண்டு, தன் முகத்தருகே கொண்டு வந்து பார்த்தபடி...)