உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொர்க்கவாசல் 117 மதி: விழியிலா?... தம்பி! உன் விழியிலே வழிந்தோடும். இளமை! அட, அடா! நான் எங்கும் கண்டதில்லை. வாலி: (சொக்கியபடி) எங்கும் கண்டதில்லையா? என்ன காண்கிறீர், என் விழியில்? மதி: (மெய்மறந்தவனாகி) கலையைக் காண்கிறேன். காவியத்தைக் காண்கிறேன். இன்பம் எது எதில் உண்டோ அவ்வளவும் ஒன்று கூடி, உன் இரு விழியிலே குடிபுகுந்திருக். கக் காண்கிறேன். வாலி: (குறும்பாக) போதும், போதும், புலவரே! போய் உட்காரும், அந்த ஆசனத்தில். [மதிவாணன் ஆசனத்தில் அமர்ந்து மகிழ்ச்சி யுடன் பாடுகிறான். பாடலைக் கேட்டு வாலி பன் மிகவும் இரசிக்கிறான். பாடல் முடிந்ததும்] மதி: இன்னும் ஓராயிரம் கூறலாமடா தம்பி, இன் பம் எது என்பதற்கு. வாலி ஆயிரமாயிரம் கூறலாம். ஆனாலும், திட்ட மிட்டு, இதுதான்' இன்பம் என்று கூற முடியாது. சரி, நான் வருகிறேன். {போக முயற்சிக்க எழுந்து நின்ற வாலிபனை ஆசனத்திலே தள்ளி...] மதி: போகவாவது! யார் உன்னை போக விடுவார்கள்? வாலி: ஐயையோ! நான் போயாக வேண்டும் - நான் போகாவிட்டால், அரண்மனையில் ஒரே அமளியாகிவிடும். . (வாலிபன் எழுந்திருக்க அவனை மீண்டும் ஆசனத் தில் தள்ளி...] மதி: தம்பி, இதோ பார்! நான் கலை விழாவுக்காக மட்டும் சோலை நாட்டுக்கு வரவில்லை; வேறு காரியம் இருக் கிறது. உன் உதவி வேண்டும். வாலி: (ஆச்சரியத்துடன்) வேறு காரியமா?