118 சொர்க்கவாசல் மதி: ஆமாம்! எங்கள் வேழநாட்டு மன்னர் திரு மண லிஷயமான வேலை. தம்பி! இந்த நாட்டு அரசிமை உனக்கு நன்றாகத் தெரியுமே வாலி: (திகைத்து) தெரியும் - அரண்மனைச் சேவகன் தானே நான். மதி: அழகியா உங்கள் ராணி. லாலி: (புன்சிரிப்புடன்) அழகி என்றுதான் எல்லோரும் கூறக் கேட்டிருக்கிறேன். மதி: (அவன் தோளைத் தட்டி) உன் அபிப்பிராயம் என்ன? அதைச் சொல்லடா தம்பி! நீ நல்ல ரசிகன். அத னால்தான் கேட்கிறேன். வாலி: (கெம்பீரமாக) எங்கள் நாட்டு ராணியின் அழகு பற்றி உனக்கு என்ன அக்கரை? மதி:(விளக்கம் கூறும் பாவனையில்) நான் கலைஞன்! கலையிலே ஒரு பகுதி அழகு. அது எங்கெங்கு இருக்கிறது என்று தெரிந்து கொள்ளும் உரிமை எனக்கு உண்டு. மேலும் யாரிடமும் சொல்லி விடாதே, இரகசியம். உன்னிடம் மட் டும் சொல்கிறேன்! எங்கள் மன்னர் வெற்றிவேலர் இந்த ராணியைத் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டிருக் கிறார். வாலி: (இரகசியமாகப் பேசுவது போலக் கேலி செய்து) அப்படியா! தூது கூற வந்திருக்கிறீரா? மதி: கேலி போதும் - அழகி என்றாயே, அரசிக்கு; அறிவு எப்படி? வாலி: (இரகசியமாகப் பேசும் முறையிலேயே) ஏன்? அதிகமோ வேழநாட்டில் அறிவுப் பஞ்சம்? மதி: (வாலிபன் காதைத் திருகியபடி) அளவு கிடை யாதா உன் குறும்புக்கு? ஒரு பெரிய அரசன் திருமண காரிய- "மாகப் பேசும்போது, கேட்பதற்குப் பதில் வேண்டும் இனி? வாலி: (கேலியாக) உத்தரவு.புலவர் பெருமானே! மதி: அரசி அறிவுள்ளவளா?
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/118
Appearance