உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொர்க்கவாசல் 119 வாலி: (கோபம் கொண்ட முறையில்) எங்கள் அரசி அழகுள்ளவள், அறிவுள்ளவள், வீரமுள்ளவள், வெற்றிவேலர் களை விரும்பாதவள். மதி: யாரிடமாவது காதல்? வாலி: மனதைப் பறி கொடுத்துவிட்டாள். மதி: யார் அந்தப் பாக்கியசாலி. வாலி: (குறும்பாக) உன் வயதுதான் இருக்கும். மதி: ஏதேது! என்னைப் போலவே இருப்பான் என்று கூடக் கூறிவிடுவாய் போலிருக்கிறதே. (வாலிபன் போக முயற்சிக்க, மதிவாணன் மீண்டும் தடுக்கிறான். மதிவாணனைத் தள்ளிவிட்டு வாசற்படி வரை செல்கிறான் வாலிபன். மதி வாணன் அங்கு பாய்ந்து சென்று அவனைப் பிடித்துத் தடுத்து...] மதி: உட்காரடா தம்பி! வாலி : (பதறி ) இதேதடா தொல்லை. நான் போய்த் தீர வேண்டும். மதி: ஏனாம்? இங்கே புலியா, பாம்பா? வாலி: பெற்றோர் கவலைப்பட மாட்டார்களா? மதி: தத்தி விளையாடும் குழந்தையல்லவா நீ உட்கார்.(மிரட்டும் பாலனையில்) உட்கார்--இதோ பார் உன்னைப் பிடித்துக் கட்டிப் போட்டுவிடப் போகிறேன். (வாலிபனைச் சேர்த்துக் கட்டிப் பிடிக்க முயல் கிறான். வாலிபன் அவன் பிடியிலிருந்து தப்பித் 'துக் கொள்கிறான். ஓரளவு பயம் தோன்றுகிறது வாலிபன் முகத்தில்] வாலி: சரி சரி...நான் இருக்கிறேன். என்னைத் தொல்லை செய்யாதே.