120 சொர்க்கவாசல் மதி: இது நல்ல தம்பிக்கு அழகு! உட்கார்-சொல்லு, உங்கள் ராணி அகம்பாவக்காரியா? யாம். 3. வாலி: கயவர் கண்களுக்கு குமாரதேவி அப்படித்தான். மதி: வெளிநாட்டு வேந்தர்களை மதிப்பதே இல்லை வாலி: குமாரதேவியைக் கொலுப் பொம்மையாக்கிய விடலாம் என்று எண்ணும் கோமான்களை மதிப்பதில்லை-- ராணி! புகழ்வர், மயங்குவதில்லை; அச்சமூட்டுவர், அரசி யின் அலட்சியப் பார்வை அவர்களுக்கு அச்சமூட்டும். மதி: வாயாடி, வம்புக்காரி! வாலி என்றெல்லாம் வசைபாடுவர், வாதத்தில் தோற்றவர்கள். மதி: மகிழ்கிறேன் தம்பி! மகிழ்கிறேன். குமாரதேவி தான் எமது மன்னருக்கு ஏற்ற மங்கை. வாலி: இவ்வளவு கூறிய பிறகுமா அந்தப் பித்தம்? சரி.. நான் வருகிறேன். எழுந்திருக்க மதி, வாலிபன் கரத்தைப் பிடித்துக் கீழே இழுத்து உட்கார வைத்து] மதி: அதுதானே முடியாது. இன்று இரவு இங்கேதான் விருந்து. காலையில்தான் விடுதலை, உனக்கு வாலி: ஐயையோ! முடியாது, போய்த் தீர வேண்டும். [மதிவாணன் எழுந்து வாலிபன் கரத்தைப் பிடித் துத் தூக்கியபடி] மதி: சரி, புறப்படு. உன் வீட்டுக்கே போவோம். எனக்கு அங்கு விருந்து. வாலி: (கலக்கத்துடன்) இதேதடா சங்கடம். என்னு டன் வரக்கூடாது.
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/120
Appearance