உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொர்க்கவாசல் 121 மதி: போக்கிரியடா நீ! நீயும் இங்கே இருக்க மறுக்கி றாய்; நானும் உன் வீட்டுக்கு வரக் கூடாது என்கிறாய். நான் என்ன, உன் வீட்டு விருந்தாளியாக வருவதற்குக்கூட யோக்யதையற்றவனா? வாலி: (கொஞ்சும் முறையில்) ஐயய்யோ! தவறாக எண்ணி விட்டீரே! நான் விளக்கம் கூறுவதற்கு இல்லை. கோபிக்க வேண்டாம். நாளைய தினம் நானே இங்கு வரு கிறேன். மதி: பாகுமொழிதான்! பசப்புக்காரா! இங்கு இன்றி ரவு இருந்தால் என்ன? [அரண்மனை மணியோசை. வாலிபன் அது கேட்டுத் திடுக்கிட்டு...) வாலி நாளைய தினம் என்னென்ன காரியம் என்று உத்தரவு தயாரிக்கும் நேரம். அரண்மனை மணி அதற்குத் தான். மதி: அரண்மனையிலே அடிக்கடி மணி அடிப்பார்கள்! உனக்கென்ன அதைப்பற்றி? வாலி: எனக்குக் கடமை இருக்கிறதே! கவனித்தாக வேண்டுமே! மதி: கடமை! ஊர்க் காவல் வேலையோ! இருந்தால் இங்கு இரு-இல்லையானால் உன் வீடு போகலாம்: வா... வாலி: என் நிலையறியாமல் பேசினால், நான் என்ன செய்ய முடியும்? (சற்றுக் கண்டிப்பாக) நான் போய்த்தான் ஆகவேண்டும். மதி: அதுதான் கூடாது. [பழத் தட்டு, பலகாரத் தட்டுகளை எதிரே மேஜை மீது வைத்து, ஒரு ஆசனத்தில் வாலிபனைத் தள்ளி தானும் ஒரு ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டு...]