உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொர்க்கவாசல் 135 அவள் புறப்பட, [பாசத்துடன் பார்க்கிறான். மதிவாணன் கூடக் கிளம்புகிறான். அவள் வர வேண்டாம் என்று தடுக்கிறாள், ஜாடை மூலம்] மதி : இருளாக இருக்கிறதே, தங்கம்! தனியாகச் செல் வதா? பெண் : காதல் ஒளி வழி காட்டும் அன்பே! என் சொல் லைக் கேட்டாக வேண்டும்---என்னைத் தொடர்ந்து வர வேண்டாம். [மதிவாணன் ஏக்கத்துடன் நிற்கிறான். மேலங்கி, தலையணி, சட்டை ஆகியவைகளைச் சரிப்படுத் திக் கொண்டு வெளியே வருகிறாள் தங்கம்...] காட்சி .62 இடம்: இன்ப நிலையத்தின் வெளிப்புறம். இருப்: குமாரதேவி, மதிவாணன். [மதிவாணன் குதிரை கொண்டு தர, அதன் மீதேறிக் கொள்கிறாள்...] (நாலடி முன்னே சென்றதும் குதிரையை வேகமாகத் திருப்பி, ஏக்கத்துடன் நின்று கொண்டிருக்கும் மதிவாணன் கன்னத்தை அன்புடன் தட்டிவிட்டு குதிரையைத் திருப்பி, வேகமாகச் செலுத்திக் கொண்டு போகிறாள்...] குதிரை செல்லும் வழியைக் கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டு இருந்துவிட்டு விடுதிக்குள் செல்கிறான்] காட்சி---63 இடம்: இன்ப நிலையம்- உட்புறம். இருப்: மதிவாணன். C [ உள்ளே நுழைந்த மதிவாணன் கீழே கிடக்கும் அரும்பு மீசையைக் கண்டு களிக்கிறான். "இதுவே இன்ப மயம் என்று மெல்லிய குரலில் பாடு கிறான்.)