சொர்க்கவாசல் 143 [குமாரி குதூகலத்துடன் பாடுகிறாள்; மதிவாண னும் இசையில் ஈடுபடுகிறான்.) னு குமார: மானும் மயிலும் பெற்றிடும் காதல் மாதெனக் கில்லையா மன்னவா? மாதெனக்கில்லையா? மதி: மாது நீ எனினும் மணிமுடி அன்றோ தரித்திடும் நிலை பெற்றாய். குமார்: மணிமுடி இருந்திடின் மனமதில் காதல் மல ருமே தோன்றாதோ, அதிலே மணமும் வீசாதோ? மதி: மொழியால், விழியால், பழி வாங்கிடும் புது முறையில் வல்லவளே! என் ஆசைக் கிளியே! ஏது சொல் வேன்? [கஞ்சிக் கலயம் எடுத்துக் கொண்டு செல்கிறாள் ஒரு மாது--ஓர் புறம்] குமார: கஞ்சிக் கலயம் தாங்கி களிப்புடன் சென்றிடும் காரிகையைப் பாராய். மதி: அவள் காதல் கனிரசம் நாடி உழைத்திடும் கண வனைக் காண்பாயே! கழனியில் கணவனைக் காண்பாயே! (உழவன் கழனியில் வேலை செய்வதைக் தேவிக்குக் காட்டுகிறான் மதிவாணன்.] குமார: இன்னமுது எந்தன் காதல் என்று சொன்னீரே அன்று; இன்று ஏற்க மறுக்கும் விந்தையை எண்ணி என் சொல்வேன் நானே! [மலர்த்தோட்டத்திலே ஒருவன் மலர் பறித்துக் கொண்டிருக்கிறான்.) மதி: தேடிப் பறிக்கிறான் பார்-- மலர்தனைத் தேடிப் பறிக்கிறான் பார். குமார: தேவனைத் தொழுதிடும் பக்தர் தமக்கே தரு வான் மலர்க்குவியல். மதி: ஆமாம்... குமார்: தருவான் மலர்க் குவியல்...
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/143
Appearance