உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 சொர்க்கவாசல் குமார: என் திருமணத் திட்டத்துக்குத் தடை போட யாருக்கும் அதிகாரம் கிடையாது. மதி: சட்டத்தைவிட சம்பிரதாயம் பலம் பொருந்தி யது தங்கமே! (பேசிக் கொண்டே இருவரும் செல்கின்றனர்.] காட்சி- 69 டம்: சோலைநாட்டு இயற்கை வெளி. இருப்: மதிவாணன், குமாரதேவி. நிலைமை: குமாரியின் முகம் மலர்ந்திருக் கிறது.மதிவாணன் முகத்திலோ இலேசாக மருட்சி தென்படுகி றது. அழகான இயற்கைக்காட்சி கள் உள்ளன. ஆடும் மயிலும், துள்ளியோடும் மானும் உள்ள சிங்காரச் சோலைகளின் வழியா கச் செல்கிறார்கள். தொலை விலே உழவர் பாடிடும் இனிய ஒலி கேட்கிறது. ரசித்தவண் ணம் செல்கிறாள் குமாரதேவி. மதி: என்ன சொல்லப் போகிறார்களோ தர்பார் வீரர் கள் - அரசிக்கு அடுக்குமா, இப்படி ஒரு கவிவாணனுடன் சரிசமமாகச் செல்வது என்று கூறுவர்- சிறுவர். குமார: கண்ணாளா! விசாரம் வேண்டாம் - காதல் பாதையிலே செல்லும்போது கவலை தரும் பேச்சே கூடாது. நான் கட்டளையிடுகிறேன். மதி: பட்டத்தரசிதானே! இல்லையா, என்ன? கட்டளையிட அதிகாரம் குமார: (மதிவாணனை கனிவாக பார்த்தபடி) காதல் ராஜ்யத்திலே உலாவுகிறோம் கண்ணாளா! அதோ பாருமே! தோகை விரித்து ஆடும் மயில் - துள்ளியோடும் மான்-- இவைகளைக் காண்கிறான்.) .