சொர்க்கவாசல் 153 வெற்றி: ஏன், என்னய்யா அழுகுரல்? ஓலையிலே என்ன எழுதியிருக்கிறான்? குமாரதேவியைக் காணவே முடிய வில்லையாமா? அமை: கண்டிருக்கிறான் வேந்தே! வெற்றி: (ஆவலாக) கண்டு.. அமை: காதகன்! வெற்றி: (ஆத்திரம் எழும்பிய நிலையில்) காதகனா! யார்? என்ன இது இழுப்புப் பேச்சு-- என்ன சேதி சொல் ... (குளத்தின் நடுவிலே எழுந்து நிற்கிறான்.) (அமைச்சர் ஓலையைத் தருகிறார் வேந்தனிடம். வேந்தன் அதை வாங்கி அவசர அவசரமாகப் பார்த்துவிட்டு, முகம் கடுமையான நிலையில் வெளியே எழுந்து வந்தபடி...] வெற்றி: துரோகி! அடுத்துக் கெடுக்கும் அற்பன்! எவ்வளவு நெஞ்சழுத்தம்! (கோபமாக உலவியபடி.) சித்ர வதை செய்கிறேன் சிறுமதியாளனை-ஊர் திரும்பட்டும்! திருமணமாம் திருமணம். அவள் அறிவுச் சூன்யம்! அரசியாம் அரசி! கலை வலையில் வீழ்ந்துவிட்டாள், கருத்துத் தெளி வற்றவள் - மலரைப் பறித்து வரச் சொல்லி மந்தியை அனுப் பினேன். நான் ஒரு மடையன்--யாரங்கே.. [பணியாட்கள் இருவர் ஓடிவருகின்றனர். போய் இழுத்து வாருங்கள் தங்கையை! மதிவாணனின் தாய், அமை: (நயமாக) வேண்டாம், வேந்தே! அந்த வானம் பாடி மீது தாங்கள் போர் தொடுப்பது அழகாய் இராது. எங்களிடம் விட்டு விடும். அவனை அழித்துவிட தக்க சமயம் இதுவல்ல... வெற்றி: ஏன், நால்வகைப் படைகளுடன் இங்கு வரப் போகிறானோ?
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/153
Appearance