சொர்க்கவாசல் 155 மதி: குமாரி! வெற்றிவேலர் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருக்கிறார். குமார: வாழ்த்துச் செய்தியா? வேந்தன் குணம் படைத்தவராகத்தான் இருக்கிறார். மதி: நான் ஊர் சென்று குமார: ஏன் இதற்குள்? பெருங் மதி: மன்னனிடம் நேரிலே கூறவேண்டாமா? தாய், திலகா இவர்களிடம் பேசி மகிழ வேண்டாமா? குமார: மகிழ்ச்சியில் மூழ்கி என்னை மறந்து விடப் போகிறீர். மதி: எப்படி முடியும் இன்பமே! (இருவரும் பாசமாகப் பார்த்துக் கொள்கின்றனர்] குமார: மறந்தே போனேன். இன்று ஆயுதக் கிடங்கை. பார்வையிட வேண்டும். அமைச்சர் காத்துக் கொண்டிருப் பார். (இருவரும்.கிளம்புகின்றனர்:] காட்சி 75 இடம்: வல்லியூரில் சோமநாதன் மாளிகை -- உட்புறம். .. இருப்: முத்துமாணிக்கம், மருத்துவர், நண்பன். நிலைமை: முத்துமாணிக்கம் உடல் நல மான நிலையில் இருக்கிறான். என்றாலும் சோகமாகவே காணப்படுகிறான். மருத்துவ ரும். அவர். நண்பரும், அவனு டன் காணப்படுகிறார்கள். முத்து: (சோகமாக) ஐயோ! நான் சாவதை ஏன் தடுத் தீர்கள்? இந்த வாழ்வும் ஒரு வாழ்வா?
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/155
Appearance