156 சொர்க்கவாசல் மருத்துவர்: உன்னைக் காப்பாற்ற தாங்கள் பட்ட கஷ் டம் கொஞ்சநஞ்சமல்ல முத்துஅதிலும் இவருடைய உத. விக்கு ஈடாக எதையும் சொல்ல முடியாது. நண்பன்: (முத்துவை நன்றாக உற்றுப் பார்த்தபடி) முத்து, பழைய முத்துவேதான். சந்தேகம் துளியும் வேண் டாம். என் சாமர்த்தியம் முழுவதும் உபயோகித்திருக்கி றேன். முத்து: (சலித்து) சாமர்த்தியம்! செத்திருக்க வேண்டி.ய என்னைப் பேசும் பிணமாகச் செய்துவிட்டிருக்கிறீர். நண்: உன் மனதிலேதான் முத்து, இப்படிப்பட்ட குழப் பம், பயம், சந்தேகம் இருக்கும். முத்துமாணிக்கம் பழைய முத்துமாணிக்கமேதான். உலகிலே எவருக்கும். உன் திலகா வுக்கும்கூட.. முத்து: (தலையிலடித்துக் கொண்டு) ஐயோ, ஐயோ! அவள் பெயரைச் சொல்ல வேண்டாம். என் கனவு, அந்தக் காதல், நான் தீண்ட முடியாத தேவி திலகா! நண்: பைத்யக்காரா! திலகாவைத் திருமணம் செய்து கொள்வதிலே என்ன தடை? என்ன ஆபத்து? முத்து: (கோபமும், வெறுப்பும் கொண்டவனாகி) திலகாவைத் திருமணம் செய்து கொள்வது? யார்?... நான்! எவ்வளவு கடினமனமய்யா உனக்கு! அந்தப் பூங்கொடி, புழுத்துப் போன எனக்கா? வேண்டாம்-வேண்டாம். இனி யொருமுறை சொல்ல வேண்டாம். திலகா! என் இன்பக் கனவு. நான் இழக்கத்தான் வேண்டும். என் திலகாவை. நண்: வீண் சஞ்சலம்-- காரணமில்லாத பயம்.. முத்து: (ஆத்திரமாக) உனக்குத் தெரியாது நான் தில் காவிடம் கொண்டுள்ள காதலின் மகிமை. அவளை மகிழ. வைப்பதைத் தவிர, அவளுக்கு பெருமை தேடித் தருவதைத் தவிர வேறு வேலையும் வேண்டாம் எனக்கு என்று இருந் தவன் நான். நண்: அந்த எண்ணத்தை தேவை இல்லையே! இப்போதும் கைவிடத் .
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/156
Appearance