உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.166 சொர்க்கவாசல் = மர: விளையாடமாட்டேன்-அப்பா! எனக்கொண்ணு வேணும்பா - தரமாட்டாயா? வெற்றி: சொல்லம்மா, தராமலிருப்பேனா? மர: (கொஞ்சும் குரலில்) மாமா வருதே இப்போ... வெற்றி: மாமா மாமான்னு அடிக்கடி சொல்லாதே அம்மா ! நீ இந்த ராஜா மக-இல்லையா? மதிவாணன் நம்ம ராஜாங்கத்திலே வேலை செய்கிறவன்தானே? மர: (முகத்தைச் சுளித்தபடி) வேலை செய்தா? மாமா தான். மாமாவை மாமான்னுதான் கூப்பிடுவேன்! து. அமை: குழந்தைதானே; அப்படித்தான் பேசும். மர: ஏம்பா! மாமாவைக் கலியாணம் செய்துக்கபோற அக்கா, ஒரு ராணியாமே. வெற்றி :ஆமாம்... ஆமாம். அதனாலே என்னம்மா? உனக்கு என்ன வேணும், சொல்லு. வேலை இருக்கிறது; போகணும். மர: அப்பா! ஒரு கிரீடம் கொடு அப்பா! வெற்றி: கிரீடமா? து. அமை: விளையாடுது... குழந்தை தானே? [பணியாள் வருகிறான்.) வெற்றி: (அரசன் கோபமாக) இளவரசியை அழைத் துக் கொண்டு போ உள்ளே. மர: அப்பா, கிரீடம். மரமே! வெற்றி: சனியனை இழுத்துக்கொண்டு போயேண்டா, [பணியாள் மரகதமணியை இழுத்துக் கொண்டு போகிறான்.)