சொர்க்கவாசல் 167 காட்சி-81 இடம்: மதிவாணன் மாளிகையின் உட்புறம் இருப்; மதிவாணன், திலகா, கற்பகத்தம் மாள். நிலைமை: மதிவாணன் வருகிறான். தாயும் திலகா : அண்ணா! திலகாவும் அன்புடன் வரவேற் கிறார்கள். மதி: அம்மா! ஏன் சோர்வு? திலகா : சோர்வா! அம்மாவுக்கா? அப்பா இல்லையே உனக்குத் திருமணம் நடப்பதைப் பார்க்க என்கிற கவலை தான்! மதி: திலகா! போதுமா இவ்வளவு ஆபரணம்? திலகா போ அண்ணா! கேவிதான் எப்பவும் அண்ணா! அண்ணி என்ன என்ன நகை போட்டிருக்கா சொல்லு. மதி: பாரம்மா! வந்த வழியிலே என்னென்ன கண்டே? எவ்வளவு கஷ்டம்? இதையெல்லாம் கேட்கல்லே! நகை என்ன போட்டிருக்கா அண்ணி--இது தெரிய வேணும் முத லிலே. இப்படி ஒரு நகைப் பைத்யம் இருக்கே.
திலகா சொல்லு அண்ணா--வைரமாவை இருக்கும். முத்துவடம் நிச்சயமாய் இருக்கும் --ராஜாத்தியாச்சே! அண்ணிக்கு இதெல்லாம் கூடவா இருக்காது? கற்: ராஜாத்தியாச்சேடாப்பா மதிவாணா! கோபம், முடுக்கு இப்படி இருக்காளா ஒரு வேளைன்னு எனக்குச் சந்தேகம்--பயம்... மதி: தங்கமான குணமம்மா குமாரிக்கு. அரசியாக இருந்தாலும், அன்பும் அடக்கமும் கொண்ட குணவதி, கற்: குணம்தானேடாப்பா முக்கியம்.