168 சொர்க்கவாசல் மதி: குணத்தைக் கண்டுதானம்மா நானும் சொக்கிப் போனேன். நான் போய் வேந்தரைப் பார்த்துவிட்டு வருகி றேன். திலகா : அவர் இல்லையே இங்கே. வன போஜன்த் துக்குப் போயிருக்கிறார். மதி: (சிறிது கவலையுடன்) அப்படியா? நான் வருவது பற்றி ஓலை அனுப்பினேன். சரி. அரண்மனைக்குப் போய் மரகதமணியைப் பார்த்துவிட்டு வருகிறேன். [வெளியே செல்கிறான்.] காட்சி--82 இடம்: வெற்றிவேலன் அரண்மனையில் ஓர் கூடம். இருப்: மரகதமணி, மதிவாணன். நிலைமை: குழந்தை மரகதமணி மதி வாணனைக் குதூகலமாக வர வேற்கிறாள். குழந்தையைத் தூக்கி முத்தமிடுகிறான் ம வாணன். மர: மாமா? மாமி கருப்பா, சிவப்பா? மதி: தங்க நிறம் கண்ணு. மர: (கேலியாக) ஐயையே... மஞ்ச நிறமா? மதி: மணி! இன்னும் ஒரு பத்து வருஷம் ஆனா நீ குமாரி போலத்தான் இருப்பே. மர: மாமி! உன்னைப் போல பாடுவாளா? மதி: என்னைப் போலவா? மரக: மாமா! எனக்கு உன் பாட்டுத்தான் உயிரு மாமிக்குப் பாடத் தெரியுமா? மதி: ஓ, தெரியுமே! மதி:ஓ மர: மாமி பாடற பாட்டு ஒண்ணு பாடு மாமா.
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/168
Appearance