சொர்க்கவாசல் 169 மதி: மாமி பாடற பாட்டா? அட்டா, தெரியாதே எனக்கு. . மர: புளுகு! இவ்வளவு நாளா மாமியோட அரண்மனை யிலே இருந்து விட்டு வர்ரேஒரு பாட்டுக்கூட மாமி சொல் லிக் கொடுத்திருக்காது? பாடு, மாமா! மதி: என்னடா இது--சங்கடம். மர: பாடினாத்தான் இன்னிக்கு நான் சாப்பிடுவேன்; இல்லையானா பட்டினிதான். மதி: ஐயய்யோ! வேண்டாம். மர: அப்படியானா பாடு. [மதிவாணன் பாட ஆரம்பிக்கிறான்.] [மரகதமணி பாடலைக் கேட்டு மகிழ்கிறாள். குழந்தையை முத்தமிட்டுவிட்டு வெளியேறு கிறான்.] காட்சி 83 டம்: அரண்மனைத் தாழ்வாரம். இருப்: இரண்டு பிரமுகர்கள் நிலைமை: மதிவாணன் அரண்மனையை விட்டு வெளியே சென்று கொண் டிருக்கும்போது இரண்டு பிரமுகர்கள் பேசுகையில் தன் பெயர் குறிப்பிடுவது கேட்டு அப்படியே நின்று கவனிக்கி றான் மதிவாணன். ஒருவர் : ஒரு ராஜ்யத்துக்கு இவள் அதிகாரி. எத்தனை ராஜாக்கள் இருக்கிறார்கள் திருமணம் செய்து கொள்ள. இவள் இந்த தரித்திரப் பயலை மணம் செய்து கொள்வதா? அந்தஸ்துக்கு ஏற்ற அறிவு இருக்க வேண்டாமோ? இல் லையே, இந்தக் குமாரியிடம்..
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/169
Appearance