170 சொர்க்கவாசல் இன் .ஒரு : நாட்டிலே பெரியவர்கள் இல்லையா, அவ ளுக்கு அறிவு புகட்ட! ஒரு: மயக்கிவிட்டான் மதுர கீதத்தால். இன். ஒரு : பாம்பும் படமெடுத்து ஆடுமாமே-இசையின் இனிமையிலே சொக்கி விடுமாமே! ஒரு : புலி கூடத்தான்! அது சரி, ஆனால் இவள் அரசி அல்லவா? பாம்பு புலி போலவா? சேச்சே! [இவர்கள் பேசக் கேட்டு மதிவாணன் கலக்கமடை கிறான். காதுகளைப் பொத்திக் கொள்கிறான்..' வெளியே வேகமாகச் செல்கிறான்.] காட்சி--84 இடம்: வீதி இருப்: முதியவர், வாலிபன். நிலைமை: வெளியே வீதியில் ஒரு வாலிம் னும் முதியவரும் பேசிக் கொள்" கிறார்கள். அவ்வழி வந்த மதி வாணன் உற்றுக் கவனிக்கிறான், அவர்கள் அறியாமல்... முதி: எனக்கும் செந்தேனாகத்தான் தம்பி இருக்கிறது. ஆனா... வாலி: என்ன பெரியவரே! ஆனாவும் ஆவண்ணாவும். முதி: அரசி - அந்த அம்மா... வாலி: ஆமாம், அதனாலே என்ன? முதி: ராணியோட புருஷனே தவிர, ராஜா இல்லே பாரு . வித்தியாசம் புரியுதா? ராணி ஒரு பஞ்ச வர்ணக் கிளி யையோ, பச்சை மயிலையோ ஆசையோட வளர்த்தா எப்படியோ, அதுபோலத்தான் மதிவாணனை கலியாணம் செய்து கொள்வதும். வாலி: உனக்கு வீணான பயம். மதிவாணனை எந்த மண்டலமும் மதிக்கும்.
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/170
Appearance