சொர்க்கவாசல் 171 முதி: உண்மையான அறிவாளிங்க அந்தஸ்துக்குத் தர மாட்டாங்க மதிப்பு. ஆனால் உலகம் என்ன, அறிவாளிங்க மட்டுமா இருக்கிற இடம்? ஒண்ணுக்கு ஆயிரம் இருக்குமே தம்பி, ஓட்டை ஓடிசலுங்க. வாலி: ஆமாம். முதி: அதற்குத்தானே இப்ப காலம். வாலி: ஆமாம் பெரியவரே. முதி: அதைத்தானே சொல்றேன். அன்பை அபிஷேகிக் கலாம் ராணி அம்மா. ஆனா, மதிவாணன் அரண்மனையிலே வேலை வெட்டி இல்லாத ஆளாகத்தான் இருக்க வேணும். வாலி: அது ரொம்ப வேதனையான நிலைதான் பெரிய வரே! ரொம்ப வேதனை. முதி: அதிலேயும், ரோஷக்காரருக்கு வேதனை வாலி: தாங்க முடியாது. ("தாங்க முடியவில்லை' என்று கூறுவது போலத் தலையை ஆட்டிக் கொண்டு கலக்கமடைகிறான் மதிவாணன்.] காட்சி--85 இடம்: வெற்றிவேலன் எனபோஜன விடுதி இருப்: வெற்றிவேலன், துணை அமைச்சர். நிலைமை: வனபோஜன விடுதியில் வெற்றி வேலனும் துணை அமைச்சரும். வெற்றி: நல்ல யோசனை! அப்படித்தான் அவமானப் படுத்த வேண்டும். து. அமை: நான் ஏற்பாடு செய்கிறேன் வேந்தே! நையாண்டி நாடகம் வேதனை தாள முடியாது மதி வர்ணனால் - வெற்றி: வேடிக்கையாகக்கூட இருக்கும். நாடகம் முதல் தரமானது. ஏற்பாடு செய்துவிடு. து. அமை : விருந்து வைத்து நாடகம் நடத்த வேண்டும்.
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/171
Appearance