சொர்க்கவாசல் 17 கற்: மதி! நாமோ ஏழைக் குடும்பம். நமக்கு விரோதம் இருக்கலாமா? அதிலும் சோமநாதரிடமா? அவரோ சீமான் மதி: ஏழை கோழையாகவே இருந்தாக வேண்டும். என்று விதி ஒன்றும் கிடையாதம்மா. மூவரும் உள்ளே செல்கிறார்கள்.] காட்சி--6. இடம்: சோமநாதர் மாளிகையின் உட்புறம் இருப்: முத்து, சோமநாதர், வில்வக்காட் டார், முதியவர். நிலைமை: சோமநாதர் பேழையைத் திறந்து ஏதோ மாலையை எடுக் கிறார். முத்து உடையைச் சரி படுத்தியபடி.... மூத்து: ஏழைகளை அடக்கி ஆளவேண்டும் என்ற எண்ணம்,ஏற்பாடு - இதெல்லாம் நியாயமுமல்ல; இனி நடக் கவும் முடியாதப்பா. சோம்: சரி... சரி. வந்ததும் உபதேசம்தானா! முத்து: உபதேசம் அல்ல அப்பா! உலகம் போகிற போக்கை.. சோம்: பிறகு எடுத்துச் சொல்லு. (எதிர்புறம் ஆடம்பர உடையுடன் ஒரு சீமான்' வருகிறார். சோமநாதர் பணிவுடன் கும்பிட்ட படி, மெல்லிய மரியாதை கலந்த குரலில் முத்து விடம்.] சோம: வில்வக்காட்டார். முத்து அவருக்கு வணக்கம் செய்கிறான். வில்வக் காட்டார் ஒரு மலர்ச்செண்டை முத்துவிடம் தர, அவன் அதைக்கண்களிலே ஒத்திக் கொள்கிறான்)
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/17
Appearance