16 சொர்க்கவாசல் முத்து: அப்பா! வீணாக இவர் மீது கோபித்துக்கொண் டீர்கள். இப்படிப்பட்ட தன்மான வீரர்தானப்பா தமிழ் நாட்டின் செல்வம் [மதிவாணனைப் பார்த்து] என் தந்தை பழைய காலத்தவர்...ஏதோ நடந்து விட்டது. பொறுத்துக் கொள். [சோமநாதர் பதில் ஏதும் கூறாது முத்துவை அழைத்துக் கொண்டு செல்கிறார். சோமநாத ருடன் வந்த ஆட்களும் கிளம்புகின்றனர். முத்து, மதிவாணனுக்கு வணக்கம் செய்கிறான். முத்து ஒருகணம் கனிவுடன் திலகாவைப் பார்க்கிறான்; திலகா கூச்சமடைகிறாள். சோமநாதர் மகனுடன் சற்றுத் தொலைவிலே செல்கிற வரையில் திலகாவும், மதிவாணனும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், தங்கள் வீட்டு வாயிற்படியில் நின்று கொண்டு.) மதி: வேடிக்கையான சம்பவம்! திலகா : சோமநாதரை நாம் கண்டித்துப் பேசினோமே, அண்ணா! அவர் மகன் மனவேதனை அடைந்துதானே இருப்பார்? மதி: தங்கமான குணம். முத்து மாணிக்கம். . (கற்பகத்தம்மாள் பதறியபடி வருகிறார்கள் பழக் கூடையுடன். கற்பகம்: என்னடா மதிவாணா! பெரிய கலகமாமே? மகனுக்கு எங்காவது அடி பட்டதோ பார்த்தபடி பேசுகிறார்கள். மதி: பிரமாதமாக ஒன்றும் இல்லையம்மா! என்று
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/16
Appearance