182 சொர்க்கவாசல் [படைத்தலைவர் மீசையில் கைவைத்தபடி புன்னகை புரிகிறார்.] குமாரி: போர் தொடுத்துவிட்டானா? தூதுவன்: புயலென ஓடிவந்தேன் அதைக் கூற! குமாரி: பிரகடனத்தைக் கிழித்தெறியும், அமைச்சரே! நான் முடிதுறக்கப் போவதில்லை! அரசி குமாரதேலியின் படைகள் தயாராகட்டும். நடுநாட்டின்மீது நாம் படை எடுக்கத் தீர்மானித்துவிட்டோம்! (குமாரி செல்கிறாள். அரசவை கலைகிறது.) காட்சி- 93 இடம்: பொது வழி. இருப்: முத்துமாணிக்கம். [முத்துமாணிக்கம் பூஞ்செடிகளுக்கிடையே செல்லு தல் - பிறகு, காய்ந்து கருகிய பாதை வழியே -- வருதல். அதுசமயம் தன்னைத் தானே நொந்து கொண்டு] திலகா! திலகா! என்னபாடு படுகிறாயோ என்னால்! திருமணம் இல்லை என்ற உடனே வேதனை, வெள்ளம் போலாகியிருக்கும்! யார் நம்புவார்கள், முத்துமாணிக்கம் திலகாவுக்குத் துரோகம் செய்வானென்று! யாருக்குப் புரி கிறது என் துரோகத்துக்குக் காரணம் என்ன என்று! எப் படிப் புரிய வைப்பேன்? காட்சி-94 இடம்: மதிவாணன் மாளிகை-- உட்புறம். இருப்: மதிவாணன்: தூதன். (விசாரத்துடன் வீடு திரும்பிய மதிவாணனிடம் குமாரியின் தூதன் ஓலை தருகிறான்] மதி: என்ன, என்ன! முடிதுறக்கவில்லையா? முடிய வில்லையா? விளக்கம் கூறுவதற்கு முடியாதா? முழு மூடனா னேன் - மோசம் போனேன்,'
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/182
Appearance