சொர்க்கவாசல் 183. தூதன்: ஓலையைச் சரியாகப் பார்த்துவிட்டுப் பேசும் மதிவாணரே... மதி : ஓலை. என் களிப்புக்கு மரண ஓலை இது.. காட்சி- --95 இடம்: மடாலய உட்புறம். இருப்: மாசிலாமணி, அருமறையானந்தர். [மாசிலாமணியும் அருமறையானந்தரும் பேசுதல்} மாசிலாமணி:(ஒரு படத்தைக் காட்டி)இந்த மாளிகை தங்கள் தங்கை கட்டிக் கொடுத்ததைவிட அழகாக இருக் கிறது இது.. அருமறை: ஆனால்... அண்ணன் மகள் தொல்லை பொறுக்க முடியவில்லை... (மற்றொரு படத்தைக் காட்டி) இதைக் கட்டிக் கொடுக்கவேண்டும். அதற்குப் பணம் கைவசம்... மாசி: நேற்று ஆயிரம் அருள்சீட்டு விற்ற பணம் என்னி டம் இருக்கிறது. அரு: மகரகண்டி வாங்கினோமே, அதற்குப் பணம் தந்தாகிவிட்டதோ? . மாசி: மாணிக்கப் பூபதியிடம் விற்ற அருள்சீட்டுத் தொகையை அதற்கே செலவிட்டேன். அரு : ஆறு கிராமங்கள் வாங்கிவிட்டு அவசரப்படு கிறாய்! மாசி: அருமையான கிராமங்கள்: விட மனமில்லை. அரு: பணம் தேவையாயிருக்கிறது, பல காரியங்களுக்கு. காட்சி--96 இடம்: மடாலயத்தின் உட்புறம்.. இருப்: மடாதிபதி, மதிவாணன், ஆண்டி. [மதிவாணன் மடாதிபதியின் தனி அறை நோக்கிச் செல்கிறான். உள்ளே மிரட்டிப் பேசும் குரல் கேட்டு வெளியே நின்று கேட்கிறான் பேச்சை.-. பதறியபடி
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/183
Appearance