சொர்க்கவாசல் 185 மதி : என் தலை சுற்றுகிறது! மனம் எரிமலையாகிவிட் டது! கவி: எதனால்? உண்மையைக் கண்டதாலா? மதி: உத்தமன் என்று ஊரெல்லாம் புகழ்கிறது, அந்த உலுத்தனை! கவி: நீயும் புதுப் புதுப் பாடல்களைப் பாடினாயே, அவ னைப் புகழ்ந்து. மதி: காட்டுராஜாபோல் பேசுகிறான் ஆண்டிக் கோலத் தில் உள்ள அக்ரமக்காரன்! பூசுவதோ திருநீறு; ஐயோ! நாடு எப்படிச் சகித்துக் கொண்டிருக்கிறது, இந்த நயவஞ்ச கத்தை? கவி : நாடு! யார், நாட்டு மக்களுக்கு உண்மையை உரைத்தவர்கள்? அவர்கள் உண்மையைத் தெரிந்து கொள் வதையும் தடுக்கத்தான் உன் திறமை- கவிதா சக்தி இருக் கிறதே! மதி : ஐயனே! சொர்க்கவாசல் கட்டுகிறானாம், அந்த சோற்றுத் துருத்தி. கவி: பொருள் திரட்டப் புது வழி! . மதி: துவக்க விழாவாம்! அதிலே என் இசைவிருந்தாம்! கவி: சொன்னானா? மதி: நான் அவனைக் காணவில்லையே! முடியவில்லை. அக்ரமக்காரன் ஆண்டிகளிடம் பேசினது கேட்டு ஓடோடி வந்துவிட்டேன், உம்மிடம் கூற! . கவி: சொர்க்கவாசல்! சொர்க்கவாசலா கட்டப் போகி றான்? அதன் மகிமையை மதுரகீதம் பாடி மக்களுக்குத் தெரிவிக்கச் சொல்லுகிறான் உன்னை. மதி: அந்த அக்ரம விழாவிலே நான் ஈடுபடமாட்டேன். கவி: சொர்க்கவாசல்! இங்கே நரகமிருக்கிறது, நாற்ற மடித்துக்கொண்டு! ஏமாளிகளைக் கொள்ளை அடித்துச் சொர்க்கவாசல் கட்டுகிறானாம் சொர்க்கவாசல். மகனே!
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/185
Appearance