உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 சொர்க்கவாசல் நரகத்தைப் பார்த்ததுண்டா? நேரம் இருந்திராது உனக்கு. உல்லாசபுரியிலே உலவியவனல்லவா? உன் கண்களிலே நரகம் தெரிந்திராது.வா, மகனே வா! நரகத்தைக் காட்டு. கிறேன் வா! நயவஞ்சகர்களால் ஏற்பட்ட நரகத்தைப் பார்க் கலாம். நல்லறிவு பெற்றவர்கள், நமக்கென்ன என்று இருந்து விட்டதால், ஏற்பட்டுவிட்ட நரகத்தைப் போய்ப் பார்க்க லாம் வாய் வா, மகனே வா..வேந்தன் வெற்றிவேவனால் ஏற்பட்ட இந்த வேதனை தரும் காட்சியைப் பார். மன்னன் நமக்கென்ன என்று இருந்துவிட்டதால் மக்கள் படும் அவதி யைப் பார். [மதிவாணன், கலியின் உருக்கமான பேச்சால் இழுக்கப்பட்டவனாய், கவியின்பின் செல்கிறான். வெட்ட வெளியில் வசிப்போர். இடிந்த வீட்டில் இருப்போர், சாக்கடை ஓரம் இருப்பவர், அரைப் பட்டினிகள், நோயாளிகள் ஆகியவர்கள் வதை பட்டுக் கொண்டிருக்கும் காட்சிகளைக் காட்டு கிறார் மதிவாணனுக்கு.] [காட்சிகளைக் காணக் காண மதிவாணனின் நெஞ்சில் சோகம் வளர்கிறது. கண்களில் கசியும் நீரைத் துடைத்துக் கொள்கிறான்.j கவி: மதிவாணா! இந்த நரகத்தை மறைக்க சொர்க்க. வாசல் கட்டுகிறார் மத அதிபர்! முறையா? இவர்களுக்கு. இதம் செய்யப் பணத்தைச் செலவிடச் சொல் சொர்க்கவாசலுக்கு அல்ல! மகனே; காட்சி-- 98 இடம்: மடாலயத்தின் உட்புறம். இருப்: மாசிலாமணி, மதிவாணன், மடத் தலைவர். மடாலயத்தில் மாசிலாணி மதிவாணனை அழைத்துக் கொண்டுபோய் மடத்தலைவர் முன் நிறுத்தி