உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொர்க்கவாசல் 187 மாசி: கண்டு பிடிப்பதே கஷ்டமாகிவிட்டது. வீட்டிலே தங்குவது கிடையாதாம். மடா: விசாரம் மதிவாணனுக்கு! குமாரதேவியின் மோசம், மனதை உடைத்துவிட்டிருக்கும். கவலைப்படாதே மதிவாணா! எங்கே போயிருந்தாய் பல நாட்களாக? மதி: நரகத்துக்கு! மடா: (சிரித்தபடி) நரகத்துக்கா? மதிவாணா! என்ன மனக்குழப்பம் இவ்வளவு? காதல் கைகூடாவிட்டால் கஷ் டம்தான்! ஆனால் அதற்காக உலகை வெறுத்து விடுவதா? மதி: காதல் சம்பந்தமாக விளக்கம் வேண்டாம். மாசி: கோபம் இப்படி வரக்கூடாது! அதுவும் இந்த இடத்தில்! மதி: அழைத்த காரணம்? அரு; சொர்க்கவாசல் விழாவுக்கு நாள் குறித்துவிட் டேன். விழாவிலே உன் இசை விருந்து-- பல நாட்டு மன்னர் கள், பிரபுக்கள், கலாரசிகர்கள், பக்த கோடிகள் இவர்கள் முன்னிலையில் உன் இசை விருந்து! மாசி: இதுவரை அப்படிப்பட்ட திருச்சபை நீ கண்டி ருக்கமாட்டாய்- இனிக் காணவும் முடியாது! மதி: இப்போதுகூட அந்தத் திருச்சபையைக் காணப் போவதில்லை நான். மடா : மதிவாணா! மதி: நான் விழாவிலே பாட முடியாது. விழா அல்ல அது; ; வீணர் கொண்டாட்டம். மடா: (திகைப்புடன்) கலந்து கொள்ள..? மதிவாணா! என்ன சொல்கிறாய்? மாசி: (கோபமாக) கலந்துகொள்ள மாட்டாராம். இந்த ராஜாதி ராஜன். மடா: மதிவாணா! என் கோபத்தைக் கிளறாதே!