உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 சொர்க்கவாசல் வெற்: பேசக் கற்றுக் கொண்டான் பிரமாதமாக. மடா: மயக்குமொழி பேசுகிறான் மக்களை வசப் படுத்த. மதி: மக்களை மரக்கட்டைகள் என்று எண்ணாதையா! யார் எதைச் சொன்னாலும் நம்பிவிடும் நிலையிலே மக்கள் இன்று இல்லை. மடா: பொய்யை மெய் போலப் பேசும் வித்தை தெரிந் திருக்கிறது உனக்கு. மதி: அந்தப் பெரும் வித்தை தங்களுடைய ஏக போக பாத்யதை அல்லவா? வெற் விசாரணை முடிந்தது. வீணனே கேள்! உன் மீதுள்ள குற்றங்கள்: புனித விழாவில் கலந்து கொள்ள மறுத் த்து, விழாவைக் கேவலமாகப் பேசியது, அருமறை யானந்தரை அவமதித்தது, அரச மார்க்கத்தை இகழ்ந்தது ஆகிய குற்றங்களைச் செய்திருக்கிறாய். மதி: இவைகளில் ஒன்றைக்கூட மறுக்கவில்லை.ஆனால் இவைகளைக் கூட்டிப் பார்த்து நான் நாத்திகன் என்று கூறு கிறீர்களே, அந்தத் தப்புக் கணக்கைத்தான் மறுக்கிறேன். வெற்: குறுக்கே பேசாதே. இவைகளைச் செய்ததால் உன்னை நாத்திகன் என்று நாம் குற்றம் சாட்டுகிறோம். பிரபுக்கள்: நாத்திகன் தான் இவன். நாத்திகன்தான் இவன். மதி: அதை நான் மறுக்கிறேன் மீண்டும். நல்லறிவை நாத்திகம் என்கிறீர், வெண்ணெய்க்கும் சுண்ணாம்புக்கும் வித்தியாசம் தெரியாத குருடனைப்போல! நயவஞ்சகம் அல்ல, நாதன் அருளைப்பெறும் வழி என்று கூறுவதா நாத்திகம். அன்பும் அறமும் அறிந்து, உண்மையை உணர்ந்து, தன்னலத்தைத் தகர்த்தெறிந்து, பொது நலத்துக்குப் பாடு பட்டு, நாட்டைப் பொன்னாடு ஆக்கினால், மக்களை வாழ வைத்தால் இறைவன் அருளைப் பெறலாம் என்று எடுத் துக் கூறுவதா நாத்திகம்? எது நாத்திகம்? அன்பையும் அருளை