சொர்க்கவாசல் 191 மடா: அஞ்ஞானிகள் கொட்டத்தை அடக்க! கள்ளிக் செந்நெல்லைத் காளான்களைக் களைத்தெறியாமுன்னம் நூவுவாரோ அறிவுடையோர்? தது? . மதி: ஞான பூமியில் ஏனய்யா கள்ளிக் காளான் முளைத் மடா உன் போன்ற பாபாத்மாக்களின் செயலால் நான். மதி: முளைவிட்ட கள்ளிக் காளான்களைக் காட்டுகி றோம். களைந்தெறியச் சொல்லுகிறோம். வயல்,உம்மிடம் இருந்தது. உபதேசம் என்ற ஏர் கொண்டு உழுதீர். மக்களின் உழைப்பு என்னும் நீர் பாய்ச்சினீர். முளைத்துக் கிடப்பதோ கள்ளிக் காவான். தினை விதைத்தால்தானே தினை கிடைக் கும். வெற்: இவனிடம் ஏன் விவாதம்? வீண் வேலை! கேள்வி பதில்-- தீர்ப்பு--இதுதான் முறை. மதிவாணா... சொர்க்கவாசல் விழாவைக் றாய் இப்போதும்? கண்டிக்கி மதி: ஆமாம் அரசே. தேவ காரியம் அல்ல அது. தேவை பர்ன காரியமும் அல்ல அது என்று கண்டிக்கிறேன். வெற்: உபதேசம் செய்கிறாயோ நீ? மதி: இல்லையே. அது அவருடைய உரிமையல்லவா? உண்மையை உரைத்தேன். உபதேசம் செய்யவில்லை. கட மையைச் செய்தேன். வெற் கடவுள் காரியத்தைக் கெடுப்பதுதான் கட மையா? மதி: கடவுள் காரியத்தைக் கெடுப்பவனல்ல நான்; கட வுளின் பெயர் கூறிக் கொண்டு கயவர்கள் வெட்டும் படு குழியில் விழ மறுத்தேன். குன்றுபோல் குவிந்ததாமே காணிக்கை. ஏழைக்கு இதம் தரும் ஏற்பாட்டுக்குச் செல விடக்கூடாதா என்று கேட்டேன். அறம் அதுதானே? ஆண்ட வனிடம் நாம் கொண்டுள்ள நம்பிக்கைக்குச் சான்று அது தானே என்று கேட்டேன்.
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/191
Appearance