உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 சொர்க்கவாசல் 2வது மலை: தம்ம சாரீரம், அண்ணே! ஜிலுஜிலுன்னு இருக்கும்! நம்மை மறந்துவிடாதே! (மூன்றாவது மலைவாசி பாடுகிறான். மதிவாணன் புன்னகையுடன் அவர்களை அணைத்துக் கொள் கிறான்.] காட்சி-102 இடம்: மடாலயத்தின் உட்புறம். இருப்: மாசிலாமணி, அருமறையானந்தர். மடாதிபதி: பாவி! கெடுத்துவிட்டானே! அவமான மாகிவிட்டது. மாசி:பிரமுகர்கள் யாரும் வெளியே போய்விடவில்லை; ஜனக்கூட்டம்தான் வெளியே போய்விட்டது. மடாதி: வெளிநாட்டிலிருந்து வந்திருந்த சீமான்கள் என்ன எண்ணியிருப்பார்கள்: கம்! மாசி: ஆனால் காணிக்கை எதிர்பார்த்ததைவிட அதி மடாதி: அதிகம்! மாசிலாமணி! அந்த மதிவாணன் மட்டும் விழாவைக் கெடுக்காமலிருந்தால், அதைவிட அதிகம் குவிந்திருக்கும். தெரியுமா? காட்சி -103 இடம்: வெற்றிவேலன் அரண்மனை-ஓர் கூடம்: இருப்பு வெற்றிவேலன், அமைச்சர், பணியாள், இரு சாமியார்கள், மலைவாசிகள். பணியாள்: ஆணவக்காரனை அடித்து விரட்டினோம். ஆனால் ஊராரின் மனதை அவன் மயக்கிவிட்டிருக்கிறான். வெற்: எப்படி? பணி: மதிவாணனின் கவிதைகள் மக்களிடம் பரவி...