உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொர்க்கவாசல் 203 வெற்: கவிதைகள்! கவிதைகள்! அவன் பாடுகிறானாம். அதுகேட்டு அவர்கள் ஆடுகிறார்களாம்...! சரி! நாத்திக மதிவாணனின் பாடல்களை நமது மண்டலத்திலே, இன்று முதல் யாரும் பாடக்கூடாது பாடினால் சிறை. தடை விதிக்கிறோம். (பணியாள் ஓடுகிறான்.) [வீதியில் இரு சாமியார்கள் பாற்காவடியுடன் வரு கிறார்கள் — ஒரு வீட்டின் முன் நின்று] சாமி: பால் காவடி தர்மம்! பால் காவடி தர்மம்! மாது: தர்மம் செய்தாகிவிட்டது. சாமி: எந்த சன்னதிக்கு? மாது: ஏழை எளியவங்க வீட்டுக் குழந்தைகளுக்குப் பால் கொடுத்துவிட்டோம். சாமி: பாலாபிஷேகம். மாது: கிடையாதுங்க முதல் பண்டாரம்: ஆசாமி கொடாக்கண்டனாயிருக் கிறான். நாலு நாளாய் நடையாய் நடக்கிறோம். 2-வது பண்: ஆசாமி சம்மதிக்கவில்லையே! முதல்: நஞ்சை நிலம் அருமையானது அம்பலம்? இரண்: தோட்டமும் சிலாக்கியம்தான். முதல்: எல்லாம் மடத்துக்குத்தானே தானமாக எழுதி வைக்கிறதாகச் சொன்னான்? இரண்': என்ன, முடிஞ்சிதா? மற்றொரு : ஆஹா முடிஞ்சுது! ஆள் போயிருக்கு, தாரை தப்பட்டைக்கு! இரண்: ஆசாமி போய்விட்டானா? தான விஷயம்? மற்: தானம் எழுதிவிட்டுத்தான் செத்தான். பூரா சொத்தையும் பள்ளிக்கூடத்துக்கு எழுதி வைத்துவிட்டான்! 3