204 சொர்க்கவாசல் முதல்: படுபாவிப்பய? அடியோடு கெட்டுப்போச்சு. வாங்க, வாங்க. மடாலயம் போவோம்! காட்சி-- 104 டம். கடைவீதி இருப்: போர் வீரன், மலைவாசி, குடியினர் (உரத்த குரலில் மலைவாசி ஒருவன் தடை செய் யப்பட்ட பாடலைப் பாடுகிறான்.} (சிறு கூட்டம் கூடிவிடுகிறது. வீரர்கள் ஓடோடி வருகிறார்கள் -- பிடரியில் கை கொடுத்துத் தள்ளியபடி... போர்வீரன்: பாடாதே! (மலைவாசி பாடுகிறான். போர்வீரன் அவன் வாயைப் பொத்தியபடி] பாடாதே! தடை--தடை உத்ரதிவு - தெரியாதா? மலைவாசி: தெரியும்! மன்னனுக்குத் தடை விதிக்கத் தெரியும்! மாவீரருக்கு அதை மீறத் தெரியும்! போர்வீரன்: போக்கிரி. மற்றொரு போர்: முட்டாள்! வேறோர் போர்; இழுத்து வாருங்கள் மற்றொரு போர்: கலைந்து செல்லுங்கள். உம்... கூட்டம்! என்ன கூட்டம்! (பாடியபடி இருக்கிறான் மலைவாசி. இழுத்துச் செல்லப்படுகிறான் போர்வீரர்களால், அவன் தெருக்கோடியில் கொண்டு செல்லப்படும்போது, வீதியின் மற்றோர் முனையில் வேறோர் மலை வாசி பாடும் குரல் கேட்கிறது. மக்கள் அந்தப் பக்கம் ஓடுகிறார்கள்.. பிடிபட்ட மலைவாசி சிரிக்கிறான்.]
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/204
Appearance