சொர்க்கவாசல் 215 துக் கொண்டு வா, இன்றிரவு ! துணைக்கு, நாலு போர் வீரர் களை அழைத்துச் செல்! [பணியாள் உத்திரவு பெற்றுக் கொண்டு செல்கி றான்...] அர: (புதிய களிப்புடன்) அதுதான் சரி!.. அவமானம் அவனை அணுவணுவாகச் சிதைக்கட்டும்! என் திட்டத் தைக் கெடுத்தான்! என் சட்டத்தை உடைத்தான்! (குரூர மான பார்வையுடன்) சிறையில் அந்தச் சிறுக்கி என்னை எவ்வளவு கேவலமாகட் பேசினாள்.... அவளை... (அரசன் போகிறான். பிறகு :..} சேவகன்: எங்கே அந்த வாயாடி? திலகா : பாபிகளே! பெண்களிடமா இப்படி முரட்டுத் தனம்? வேண்டாம்...அக்ரமக்கூத்தாடாதய்யா. சேவ: வாயாடி, கிளம்பு கற்ப: என்னப்பா இது? திலகார் நெருப்புடன் விளை யாடாதே என்றால் கேட்டாயா? தில: அம்மா.. அம்மா... கற்: ஐயா, இதென்ன அக்ரமம்? சேவ: இது அரசன் ஆணை. தில அபலைகளை இம்சிக்கச் சொல்வதா? இதுவா அரசன் ஆணைர் சேவ: என்னிடம் வாதாடாதே! வீடு..! சுற்பு: விடமாட்டேன். (சேவகன் இழுத்துச் செல்வ, திலகா, 'அம்மா, அம்மா" எனக் கதறுகிறாள். மற்றப் பெண்கள் ‘திலகா! திலகா!' எனக் கூச்சலிடுகின்றனர்.]
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/215
Appearance