216 சொர்க்கவாசல் [தவனக் காட்டுக் கோட்டை. திலகா அரசனால் கற்பழிக்கப்படுகிறாள். அரசன் வெளியில் போகும் போது அங்குள்ள சேவகனைப் பார்த்து,] அரசன்: அவளை இஷ்டம்போல் விட்டுவிடுங்கள்! தடை செய்ய வேண்டாம். [திலகா அலங்கோலமான நிலையில் சுற்றுகிறாள். காட்டில் பைத்தியம் பிடித்தவள் போலாகிறாள் திலகா. பாடுகிறாள்.] காட்சி-107 இடம்: வெற்றிவேலன் அரண்மனை-ஓர் கூடம் இருப்: வெற்றிவேலன், அமைச்சர். (நிம்மதியற்ற மனத்தினனாயிருக்கும் வெற்றிவேல னிடம் அமைச்சர் வருகிறார்.] அமை: நல்ல சேதி, அரசே! நல்ல சேதி! வெற்றி: என்ன சேதி? மதிவாணன் மாண்டானா? அமை: அதைவிட நல்ல செய்தி, அரசே! அந்தக் குமார தேவியை அழிக்க ஓர் அருமையான சந்தர்ப்பம் கிடைத்து விட்டது. வெற்றி: விளக்கமாகப் பேசும் ஐயா? அமை: நடு நாட்டரசன் போர் தொடுத்து விட்டான்- குமாரிக்குப் பேராபத்து-படைகளைச் சுற்றி வளைத்துக் கொண்டுவிட்டான். வெற்றி: (சிறிது யோசித்துவிட்டு) படைகள் புறப் படத் தயாராகட்டும். நடுநாட்டரசன் படைகளை நமது படைகள் தாக்கட்டும், பின்புறமிருந்து... அமை: (ஆச்சரியத்துடன்) அரசே!
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/216
Appearance