உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொர்க்கவாசல் 227 குமாரி: உங்கள் கோபப் பேச்சிலும் கவிதை நடை இருக்கிறது. மதி: (கோபமாக) காதல் மொழி பேசி என் கருத்தைக் கெடுத்த காதகி! ஏன் என்னைப் பித்தனாக்கினாய்? 'ஆரு யிரே, அரசா பெரிது!--இதோ முடி துறக்கிறேன்' என்று மழுப்பிவிட்டு, என்னை மோசம் செய்தாய். ஒரு முடிக்காக! என்னை நடைப்பிணமாக்கினாய், அரச போகத்திற்காக! குமாரி: பதவி மோகம் எனக்கு! அதனால் உம்மை மோசம் செய்தேன்! அதுதானே, இன்னுயிரே, உம் குற்றச் சாட்டு? மதி: (கோபமாக). இன்னுயிர்? எவ்வளவு துணிவு அப்படி இன்னமும் சொல்ல... [குமாரதேவியைத் தாக்குபவன்போல் செல்கிறான். அவள் விலகாமல் நிற்கிறாள். அருகே சென்ற மதிவாணன் தயக்கமடைகிறான்.) குமாரி (புன்னகையுடன்) ஏன், அச்சமா? உம் காதல் தணியவில்லை. அந்த ஒளி கோபமாக வெளி வருகிறது! மதி: தர்பார் தருக்கன் எவனாவது அவனிடம் காட்டு உன் சாகசத்தை.. கிடைத்தால் குமாரி: (முகத்தில் கோபரேகை படர) எல்லைக்கு வந்தாகிவிட்டது, கண்ணாளா! என் மனமும் ஒரு அளவுக் குத்தான் தாங்கிக் கொள்ள முடியும். மதி: (கேலியாக) ஆஹா! என்ன உருக்கம்! எவ்வளவு நேர்மை! குமாரி (கோபமாக) மதிவாணரே, இதோ பாரும்! (பிரகடனத்தை வீசி எறிகிறாள் அவன் முகத்தில். மதிவாணன் அதைப் பரபரப்புடன் படித்துப் பார்க் கிறான்...)