226 சொர்க்கவாசல் அரசன்: விளக்கா ஆமாம், ஒரே இருளாகத்தான் இருக்கிறது, என் மனம் போல (உள்ளே சென்று குழப்பத் துடன் திரும்பி) அமைச்சரே! கொடுமை செய்துவிட்டேன்! மனம் நிம்மதியாக இல்லை! உலவிவிட்டு வருகிறேன்! அமைச்சர் உடன் வருவது கண்டு) இல்லை, தனியாக! (காட்டில், மன்னன்! திலகா, கவசத்தால் மன்ன னைத் தாக்குகிறாள்.] அரசன்: யாரது? திலகா : வீராதி வீரனே! அபலைகளை அணைத்து அழிப்பதிலே அனுபவம் அதிகமல்லலா உனக்கு! ஏன் இந்தக் காட்டு ராணியைக் கண்டு ஓட்டமெடுக்கிறாய்? (மீண்டும் அரசனைத் துன்புறுத்துகிறாள். அரசன் உடலிலிருந்து ரத் தம் கசிகிறது) திலகா : அன்பின் அறிகுறி! காதல் வெள்ளம்! காட்சி ---116 இடம் : வெற்றிவேலன் அரண்மனைத் தோட்டம் இருப்: மதிவாணன், குமாரதேவி. . [மரகதமணி, குமாரதேவியின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டுபோய், ஒரு புன்னைமர நிழலில் உட்கார்ந்து கொண்டுள்ள மதிவாணனைக் காட்டு கிறாள். மதிவாணன் திடுக்கிட்டு எழுந்திருக்கிறான். முகத்திலே கோபமும் வெறுப்பும் படருகிறது...) மதி: (வெறுப்புடன், கேலிக்குரலில்} மஹாராணி; வணக்கம்! நம்பி மோசம் போன இந்த நாடோடியின் வணக் கத்தை ஏற்றுக் கொள்வீரோ என்னமோ? குமாரி: (அமைதியாக) மதிவாணரே! கோபம் வரத் தானே செய்யும். ஆனால்! மதி: ஆனால்! அரண்மனைவாசிகளான எமக்கு இது தான் பொழுதுபோக்கு என்று கூறுகிறீரா தேவியாரே?
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/226
Appearance