உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொர்க்கவாசல் 25 திலகா: என் அண்ணாவை எப்படியோ உம்வசமாக்கிக் கொண்டீரே, மாயக்காரா...! . (மேலும் எதுவும் சொல்ல முடியாமல் திகைக்க...] முத்து: மாயக்காரனல்ல திலகா! மாயக்காரிகள் நிறைந்த இடத்திலே இருந்தவன்... ஆனால் மனதைப் பறி கொடுத்திடாதவன். தெரியுமா? திலகா : (கேலியாகப் பேசுகிறாள்). யார் கண்டார்கள்! ஆடவர்களின் பேச்சிலே நம்பிக்கை வைப்பது, அப்பப்பா.. மிகமிக ஆபத்து.

'. முத்து: இப்படிச் சொல்லிச் சொல்லியே பெண்கள், ஆடவர்களைப் பித்தராக்கி விடுகிறார்கள். (பெண் குரல் போலப் பேசி). நான் பேதை-நீரே என் கதி என்று நம்பி இருக்கிறேன் -உம்மைக் காணாதபோது என் இரு கண் ணும் உறங்காது. (சொந்தக் குரலில்) என்றெல்லாம் வீணா கானம் மீட்டி, ஆடவரின் மனதை வாட்டி வதைத்து அடிமை யாக்கி விடுகிறார்கள். திலகா : (கோபிப்பது போலாகி), பொய் பொய் முழுப் பொய் - அண்ணாவைக் கேட்போமே. முத்து: (அவள் கரத்தைப் பிடித்திழுத்தபடி.) வா- கேட்போம். {இருவரும் தோட்ட வீடு நோக்கிப் போகிறார்கள்.] காட்சி .10. இடம்: மதிவாணன் தோட்ட வீடு-உட் புறம். இருப்: முத்து, திலகா, மதிவாணன் நிலைமை: மதிவாணன் ஏட்டிலே ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறான், யோகனையில் ஆழ்ந்தபடி