- 26
•மதிவாணன் . சொர்க்கவாசல் நிலைமையைக் கண்டு திலகாவைத் தடுத்து நிறுத்தி விடுகிறான், முத்து- சுற்று தொலைவிலேயே. முத்து: திலகா ! இப்போது தொந்தரவு தரக் கூடாது. திலகா : (கேலியாக) ஏன்? கவி எழுதுகிறார் அண்ணா! அதனால்தானே... முத்து: ஆமாம் - சுற்பனையைக் கூடாது. -- கெடுத்துவிடக் திலகா : அண்ணா, எப்போதுதான் கவி எழுதாதிருக் கிறார்? சொர்ணாபிஷேகம் செய்கிறார்களல்லவா அண்ணா வுக்கு, எழுத வேண்டியதுதான் கவிதைகளை. காட்சி-11 இடம்: சோமநாதன் மாளிகை-- உட்புறம். இருப்: சோமநாதர், சிநேகிதர். மாளிகை-உட்புறம். நிலைமை: சோமநாதன் கோபமாக இருக் கிறார். தன் எதிரே நிற்கும் ஆளைப் பார்த்து உரத்த குர லில் பேசுகிறார் -- எதிரே நிற் கும் ஆள், தான் மூட்டிய கலகம் பலித்தது என்ற மகிழ்ச்சியுடன் காணப்படுகிறான். சோம: சொர்ணாபிஷேகம் செய்யக் காத்துக் கொண் டிருக்கிறார் வில்வக்காட்டார்-இந்தப் பயல், சோற்றுக்குத் திண்டாடும் வீட்டுப் பெண்ணை வேட்டையாடிக் கொண்டி ருக்கிறான். குடும்ப கெளரவம், எதிர்கால வாழ்வு எல்லாம் என்னாவது? சிநே: சொக்குப் பொடி போட்டு விட்டாள் அந்தச் சொகுசுக்காரி. முத்து, இதுவரை இப்படி நடந்ததுண்டா?