28 சொர்க்கவாசல் திலகா : (குறும்பாக) சரி-உங்களுக்கும் பிடித்து விட் டதா அந்தப் பைத்யம்? முத்து: (அவள் பேச்சைக் கவனியாமல்) அரச சபை களிலே இப்படிப்பட்ட அருங் கவிதைகளுக்கு, எவ்வளவு சன் மானம் கிடைக்கும் தெரியுமா? புதையல் இருப்பது தெரியா மல் அதன் மீது உட்கார்ந்து கொண்டு புலம்பும் போக்கப்பா இது திலகா : பல ஆயிரம் தடவை சொல்லிச் சொல்லி சலித் துப் போனவள் நான்-வெற்றி உங்களுக்காவது கிடைக் கிறதா பார்ப்போம். மதி: பொன், பொருள், திலகாவுக்கு மலை அளவு குவிந்தால்கூட போதாது. அளவு கடந்த ஆவல்- திலகா அளவு ஒன்றும் அதிகமில்லை தவசியாரே! மதி: முத்து ஆரமும், மாணிக்கப் பதக்கமும் தா என்பாய். நான் பூந்தோட்டத்தை நம்பிப் பிழைப்பவன். முடியுமா தருவதற்கு? அதனால்தான்,இதோ, முத்துமாணிக் கம்! பெற்றுக்கொள் என்றேன். (ஏடுகளைப் படித்தபடி இருந்த முத்து முத்து: உன் கற்பனைத் திறம், மதிவாணா! உள்ள படியே எனக்கு கோபந்தான் வருகிறது. சந்தனக் கட்டையை மாட்டுத் தொழுவத்திலே போட்டு வைப்பதா? சரியா? முறையா? உன் கவிதை தரும் இன்பத்தையும் அறிவையும். நாடு பெற வேண்டாமா? மதி: இதென்ன முத்து! அரச சபைகளிலே கவிவாணர் கள் எவ்வளவோ டேர்! என் கவிதை இல்லாவிட்டால் என்ன குறைவு வந்துவிடும்? முத்து: பல ஆயிரம் நட்சத்திரங்கள் வான மண்டலத். திலே இருக்கும்போது நான் வேறு தேவையா என்று சந் திரன் கேட்கிறானா? அடக்கம் தேவைதான் மதிவாணா!?
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/28
Appearance