உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 சொர்க்கவாசல் மதி: ஏது இவ்வளவு தூரம், உட்காருங்கள். (என்று கூறியபடி ஒரு கல் ஆசனத்தைக் காட்ட, சோமநாதர் உட்காராமல் கோபத்துடன்...] சோம: மதிவாணா! (கோபம் அதிகமாகி மேலும் பேச முடியாமல் திகைக்கிறார். மதி: கோபம் ஏன் இவ்வளவு? {ஆத்திரம் பீறிட்டுக் கொண்டு வருகிறது, சோம நாதருக்கு.) சோம்: மகா யோக்யன்போல் பேசுகிறாயே, துளி யாவது மான ரோஷம் இருந்தால் இப்படியா காரியம் நடை பெறும்? [மதிவாணன் சோமநாதரின் கோபத்தின் கார ணத்தை ஒருவாறு யூகித்துக் கொள்கிறான். அவ னுக்கும் கோடம். ஆனால் அதை அடக்கிக் கொண்டு...) மதி: ஐயா! ஆத்திரப்படாமல் பேசும். என்ன வேளை யாக வந்திருக்கிறீர்? அதைச் சொல்லும்!

சோம: மண்டைக் சர்வமடா உனக்கு. பஞ்சைப் பயலே! பராரிப் பயலே! மதி: (ஆத்திரமாக) பெரியவரே! சோம: என் மகனை வலை போட்டுப் பிடிக்க ஒரு மாயக்காரியை ஏவி விட்டுவிட்டு, என்னை எதிர்த்தா பேசு கிறாய்? பொடிப் பொடியாக்கி விடுவேன் உன்னை. மதி: அளவு அறிந்து பேசும், சோமநாதரே! வயது சென்றவர் என்ற ஒரே காரணத்தால், உமக்குத் தக்க பாடம் காட்டாமலிருக்கிறேன்.