உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. சொர்க்கவாசல் (இதற்குள் சோமநாதரின் அடியாட்கள் வந்து விடுகிறார்கள். சோமநாதர் மேலும் ஆணவமாகி றார். கற்பகத்தம்மாள் மூர்ச்சையாகிக் கீழே சாய்ந்து விடுகிறார்கள். மதிவாணன் இதைக் கவனிக்கவில்லை...) சோம்: வெறி நாயே! பார், வேட்டைக்காரர்களை! [அடி ஆட்களை மதிவாணன் முறைத்துப் பார்க்க, அவர்கள் முன்பு ஒருமுறை அவனிடம் அடி பட்ட சம்பவத்தை நினைத்துக் கொண்டு சிறிது நடுக்கம் கொள்கின்றனர்...] தெரியுமா? சோம: முத்துமாணிக்கத்துக்கு வில்வக்காட்டுச் சீமான் தன் ஒரே மகளைத் தர தவம் கிடக்கிறார். நானும் என் சம்மதம் கொடுத்திருக்கிறேன்.அதைக் கெடுத்து நாசமாக்காதே. உன்னைச் சும்மாவிடமாட்டேன். உன் குடும்ப யோக்யதை என்ன? என் குடும்ப அந்தஸ்து எப்படிப் பட்டது? என் மகன் உன் தங்கையை மணம் செய்து கொள் வதா? எப்புடியடா சம்மதம் தந்தாய்? பூ விற்றுப் பிழைக் கும் பராரி நீ மறந்து விட்டாயே அதை! பூபதிகளுடன் பழகும் நிலையிலுள்ளவன் நான்- தெரியுமே உனக்கு என் மகன் அரச சடையிலே பெரிய பதவியில் இருப்பவன்-- அவனுக்குத் திலகாவா மனைவியாவது? சிங்கத்தின் உண வைத் திருடும் சிறு நரியே! சீறுகிறாயா? சீறு, சீறு! இட்டோது உன்னைக் கூறு போட்டு கழுகுக்கு இரை தருகிறேன். [பதைக்கிறான் மதிவாணன். . அடியாட்கள் பாய்ந்து சென்று அவனைப் பிடித்துக் கொள் கிறார்கள்...] அரச சபையினர் ஒரு பத்துப் பேர், என் மகனுடைய நண் பர்கள் வந்தால், ஒரு வேளை. விருந்தளிக்க, உனக்கு வக் குண்டா, வகையுண்டா? [மதிவாணன் கண்களிலே நீர்...] என்னடா இது, நீலிக் கண்ணீர். [மதிவாணனைப் பிடித்து உலுக்கியபடி....]