உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொர்க்கவாசல் 33 இதோ பாரடா அறிவற்றவனே! உன் தங்கையின் எடைக்கு எடை தங்கத்தைக் கொடுத்தால், திருமணத்துக்குச் சம்மதிப் பேன் - முடியுமாடா உன்னால்! மூடா,முடியுமா? [மதிவாணன் ஆத்திரமும் கொள்கிறான். அழுகை யும் வருகிறது...) எடைக்கு எடை தங்கமடா தங்கம்! தர முடியுமா? டொன் காய்க்கும் மரங்களா இவை? [மதிவாணன் கன்னத்தில் அறைந்து...] நிலைமையை அறிந்து நட! (ஆட்களுக்கு ஜாடை காட்டி அழைத்துச் செல் கிறார் சோமநாதர்...] [அவர்கள் போன பிறகு மதிவாணன் நீர் கொப் புளிக்கும் கண்களுடன்...] மதி: பஞ்சை! பராரி! உண்மைதான். உள்ளத்தைச் சுடும்படி பேசினான் அந்த உலுத்தன் - என்றாலும் உண்மை தான் அவன் சொன்னது. ஏழ்மை, இழிநிலையைத் தருகிறது; செல்வம் செருக்கைத் தருகிறது. (கற்பகத்தம்மாள் கவலையுடன் இருக்கக் கண்டு அவர்களுக்கு ஆறுதல் கூற...) கற்: ஏழைகள்தானப்பா நாம்! ஆனால் உன் அப்பா வின் சேவைக்காக நமது குடும்பத்துக்கே அரச குடும்ப மரி யாதை தந்தார் மன்னர், உன் அப்பாதான் அதையும் மறுத்து' விட்டார். மதி: அதுதானம்மா பெருங்குணம். கலங்காதே அம்மா! நமது குடும்பத்துக்கு களங்கம் ஏதும் ஏற்பட்டு விடாது, என் உயிர் இருக்கும் வரையில். கற்: (சோகமாக) கேட்கச் சகிக்கா த பேச்சை வீசி னானே அந்தச் சீமான்? பூ-15 6- சொ-2