48 சொர்க்கவாசல் எண்டி: தம்பி! அப்படிப்பட்ட தமிழ் நாடு இப்போது தேய்ந்து வருகிறதே. ஏன்? மதி: பண்பை இழந்ததால்தான்! பாதையிலே படுகுழி இருந்தால் வண்டி என்ன ஆகும்? வண்டி: படுகுழியிருப்பது ஏன் தம்பி தெரியவில்லை? மதி: படுகுழி தெரியாதபடி மேலே பச்சிலை போட்டு மூடி வைத்து இருந்தால் எப்படித் தெரியும்? வண்டி: உண்மைதான் தம்பி! நீ பாதையைப் பார்த்து ஓட்டு வண்டியை. காட்சி-23 இடம்: ஊர் வெளிப்புறத்தே உள்ள சாலை இருப்: மதிவாணன், ஆட்கள், யோட்டி நிலைமை: மதிவாணனுடைய வண்டி வண்டி ஊருக்குள் பிரவேசிக்கிறது. நாலைந்து ஆட்கள் வண்டியை மடக்கி வேறு பக்கமாக போகச் சொல்லுகிறார்கள்... மதி: ஏன்? இந்தப் பாதை வழியாகத்தான் போக வேண்டியிருக்கு. ஆள்: அப்படியானா, வண்டியை ஏதாவது மரத்தடி யிலே நிறுத்தி வை. மடாதிபதியோட பல்லக்கு போன பிறகு போகலாம். வேறோர் பாதையிலிருந்து பல்லக்கு பரிவாரம் வருவது தெரிகிறது. வண்டியோட்டி இறங்கி வண்டியை ஓரமாக நிறுத்துகிறான். மதிவாணன் கீழே இறங்குகிறான். ஆட்களில் ஒருவனைப் பார்த்து...]
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/48
Appearance