சொர்க்கவாசல் வண்டி: யாரு வருவது? ஆள்: மடாதிபதி அருமறையானந்தர்! மதி: எங்கே போகிறார்? 49 ஆள்: அவர் வேழநாட்டு மடாதிபதியாக இருக்கிறார். அங்கேதான் போகிறார். மதி: வேழ நாட்டுக்கா? நானும் அங்கேதான் போகி றேன், வேறு வேலையாக. வண்டி: தம்பி பாடுவது கேட்டா, மயில் ஆடும். ஆள்: பாடுவாயா? மதி: சுமாராகப் பாடுவேன். கவிதையும் எழுதுவதுண்டு! ஆள்: (மற்றவர்களைப் பார்த்து) அண்ணே, அண் ணே! இங்கே வாங்க. இதோ, இந்தத் தம்பி கவி எழுதுதாம்! பாடுமாம். ஆட்: (மதிவாணனைப் பார்த்து) ஆளைப் பார்த்தா..? ஆள்: காதிலே குண்டலம், கழுத்திலே தாவடம், பட் டாடை இல்லையேன்னு யோசனையா? நெஜமாத்தான் அண் ணேன் ! அருமையான கவி இந்த தம்பி; பெரியவரு சொல் றாரு, கேளேன். ஆட்: வா தம்பி! வா. ஊருக்கு ஒரு உபசாரம், மடாதி பதிக்கு உபசாரம் செய்ய வேணும். ஒரு கவி பாடு. [மதிவாணனை அழைத்துச் செல்கிறார்கள்...] காட்சி--24 இடம்: ஊர்ப் பொதுமண்டபம். இருப்: மதிவாணன், அருமறை, மக்கள். நிலைமை: அருமறையானந்தர் அமர்ந் திருக்கிறார். ஆடம்பரமாக
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/49
Appearance