சொர்க்கவாசல் 59 நிலைமை: வீதியின் ஒரு புறத்திலே, படை வீரர்கள் வந்து கொண்டிருக்கி றார்கள்.. பாதையில் மற்றோர் கோடியில், கவிராயரும் மகளும் நடந்து சென்றுகொண்டிருக் கின்றனர். கவி: ஊர் போகு முன்பு, என் நண்பன் மதிவாணனைப் பார்த்துவிட்டுப் போகலாம். மகள்: மதிவாணனையா அப்பா! உனக்கு நண்பனா, அந்த உல்லாசபுரி ஊழியன்? கவி: கெட்டு விட்டானா அவனும்? மகன்: கெடலில்லையே! மக்களைக் கெடுக்கிறான், மதுர சீதத்தால்! மதுரகீதம் மடத்து ஆயுதமாகி விட்டது. மந்தகாசமான வாழ்வு அவனுக்கு. டது. கவி: (சோகமாக) செல்வம் அவனைச் சீரழித்து விட் மகள்: அருமறையானந்தரின் ஆதிக்கம் வளருவதே, அவனால்தானப்பா! அந்தக் கபட வேடதாரிக்கு, இந்தக் கலை வாணிபன் ஏவல் செய்கிறான். கவி: பரிதாபம். பரிதாபம்... (எதிர்ப்புறமிருந்து வரும் படையினரில் ஒருவன் தலைவனிடம்..} படை: அதோ, பூங்கோதை: சீமான் மந்திரமூர்த்தி யின் மனைவி. தலை: சீமான் மனைவியா? படை: புதிய கோலம்! தலை: கிழவன்? படை: சதிகாரரில் ஒருவன். தலை: பிடி-- விடாதே! (விரைந்து சென்று இருவரையும் பிடித்து இழுத்து வருகிறார்கள்.]
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/59
Appearance