+68 சொர்க்கவாசல் மதி: நானே பாடவா? மர: நீ பாடினா கேட்கக் கேட்க நல்லாயிருக்கு மாமா! [மரகதமணியை அன்பாக, மெதுவாகக் கன்னத்தில் தட்டிவீட்டு மதிவாணன் பாடுகிறான். மதி வாணன் பாடலைக் கேட்டு மரகதமணி மகிழ் கிறாள்.] காட்சி-35 டம்: மடாலய உட்புறம் இருப்: அருமறை, மாசிலாமணி, மாணிக்கம், மதிவாணன். முத்து நிலைமை: அருமறையானந்தர் கெம்பீர உடை அணிந்து கொண்டு, அலங்காரமான பீடத்தில் அமர்ந்து கொண்டு இருக்கிறார், ஒரு ஓலையைப் படித்தவண் ணம். பக்கத்தில் மாசிலாமணி நின்று கொண்டிருக்கிறான்... எதிரே அடக்கமாக முத்து மாணிக்கம் நின்று கொண்டிருக் கிறான். ஓலையை ரசித்துப் படிக்கிறார் அருமறை. மாசிலா மணியைப்பார்த்துப் பெருமிதத் துடன்... அரு: நடுநாட்டரசர் ஓலை! இங்கு குறை ஏதும் இல் லையே - ஏதேனும் உதவி தேவையா என்று கேட்டிருக்கி றார். நம்மிடம் அவ்வளவு பற்று. மாசி: நாதன் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும் நடு நாட்டரசருக்கு. அரு: அதிலென்ன சந்தேகம்? [முத்துவைப் பார்த்து..
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/68
Appearance