சொர்க்கவாசல் 69 மன்னரிடம் சொல்லு, இங்கு வேழநாட்டு வேந்தன் வெற்றி வேலன், நமக்கு நல்ல ஆதரவு தருவதாக! குறை ஏதும் இல்லை. மாசி: மடாலயத்தின் கீர்த்தி மண்டலமெங்கும் பரவி விட்டது. அரு மாசிலாமணி போன்ற மெய்யன்பர்களின் தொண்டுதான் காரணம். உன் பெயர். முத்து: முத்துமாணிக்கம். அரு: மெத்த மகிழ்ச்சி. மடாலயத்திலே சிலநாள் தங்கி இருக்கலாம். [மதிவாணன் வருகிறான், மடாதிபதிக்கு வணக் கம் செய்தபடி...] {முத்துமாணிக்கமும் மதிவாணனும் சந்தித்து அன்புடன் தழுவிக் கொள்ளக் கண்ட மடாதிபதி] ஓ! இருவரும் நண்பர்களோ! முத்துமாணிக்கம்! மடாலயத் தின் புகழ் பரவக் காரணமே, மதிவாணனின் மதுரகீதம் தான். ஆஸ்தான கவி இப்போது, மதிவாணன். [முத்து, மதிவாணனைப் பெருமையாகப் பார்த்துப் பூரிக்கிறான்...] மதி: எல்லாம் தங்கள் அருளின் பலன்தானே! [வணக்கம் செய்துவிட்டு றனர்... காட்சி .3 6 இருவரும் செல்கின் இடம்: தோட்டம். இருப்: முத்துமாணிக்கம், திலகா, கற்பகம், மதிவாணன்.
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/69
Appearance