உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொர்க்கவாசல் 81 மாசி: ஆஹா! சொர்க்கலோகம் ஐதீகப்படி அமைக்கப் படும். நான் சென்று குருநாதருக்கு கூறுகிறேன்; களிப்புக் கடலில் மூழ்குவார். மன்னன் வணக்கம் செய்ய, மாசிலாமணி செல் கிறான். அவன் பின்னால் சென்ற பணியாள்...] பணி: ஒரு சிறு சந்தேகங்க, படத்தைப் பார்த்ததிலே! மாசி: மர மண்டே! என்னடா சந்தேகம்? பணி: யாருக்கும் ஏற்படக்கூடிய சந்தேகம்தாங்க. மாசி: சொல்லுடா, என்ன சந்தேகம்? பணி: சொர்க்கலோகப் படத்திலே. கைலாயம் வைகுந்தம், அந்த லோகம், இந்த லோகம் எல்லாம்தான் இருக்குது- ஆனா ... மாசி: ஆனா.. என்னடா ஆனா...? பணி: சொர்க்கலோகம் எப்படி எப்படி இருக்கும் என்றுதான் படம் காட்டுதே தவிர, இங்கே இருந்து அங்கே போகிற பாதை தெரியலிங்களே படத்திலே... மாசி: போடா போக்கிரி. பணி: பாதையைக் காட்டாத காரணம் என்னங்க- தெரியாததாலா? தெரியக் கூடாது என்பதாலா? [மாசிலாமணி முறைத்துப் பார்க்க, பணியாள் அசட்டுச் சிரிப்புடன் சென்று விடுகிறான்.] காட்சி-40 இடம் : நடுநாடு --முத்துமாணிக்கம் விடுதி. இருப்: சோமநாதர், பணியாள். முத்துமாணிக்கம், நிலைமை: சோமநாதர் தன் மகனின் வரு கைக்காகக் காத்துக்கொண்டி ருக்கிறார். பணியாள் ஒருவன் அவருடன் கிறான். பேசிக்கொண்டிருக்