82 சொர்க்கவாசல் சோம்: பாதை நல்லாத்தானே இருக்கு, வேழ நாட் டுக்கும்.நடு நாட்டுக்கும்? பணி: பாதை, மேடு பள்ளம் நிறைந்ததுதானுங்க. இருந்தாலும் என்னங்க, அவருக்குப் பழக்கமான பாதை தானுங்க. பலமுறை போயிருக்கிறாரே. சோம: வேழ நாட்டுக்கா? பணி: ஆமாங்க- சொந்த வேலையாகவும் போவாரு; ராஜாங்க வேலையாகவும் போவதுண்டு. இப்ப அரசாங்க அலுவலாகத்தான் போயிருக்காரு. தாக. .. (வெளியே யாரோ வருகிற சத்தம் கேட்டுப் பணியாளரும் சோமநாதரும் பார்க்கிறார்கள். முத்துமாணிக்கம் உள்ளே வருகிறான். சோமநாதரைக் கண்டதும் அன்புடன்...] முத்து: அப்பா, தாங்களா? தகவலே இல்லையே, வருவ (என்று கூறியபடி தழுவிக் கொள்கிறான்.] சோம: முத்து! வேழநாடு போய்விட்டா வருகிறே? உடைவாளை எடுத்து வை. உட்கார் இப்படி. முத்து: (தந்தை எதிரே உட்கார்ந்தபடி) என்னப்பா? சேரம: வில்வக்காட்டார் கோபமாக இருக்கிறார். முத்து. திருமண விஷயமாக நீ இன்னமும் முடிவு செய்யா திருக்கிறே! சரியில்லை. முத்து: (தயக்கத்துடன்) அப்பா! சோம: பெரிய இடத்துப் பகை கூடாது முத்து! அத னால்தான் உன்னைக் காண நடுநாடு வந்தேன். வில்வக் காட்டார் வீட்டு சம்பந்தம் சாமான்யமாகக் கிடைக்கக் கூடி. யது அல்ல. முத்து: என் மனம் ஒரு நிலையில் இல்லை அப்பா!
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/82
Appearance