.94 சொர்க்கவாசல் மாசி: வெளிப்படையாக விசாரிக்கக் கூடாது. புது மதக்காரர்களிடம் எவ்வளவு பொருள் இருக்கிறது? பணம் எப்படி திரட்டுகிறார்கள்? இதெல்லாம் தெரிய வேண்டும். மதி: என்னென்ன கருத்துக்களைக் கூறுகிறார்கள் என் பதையும் தெரிந்து கொள்கிறேன். மாசி:(அலட்சியமாக) தெரியுமே அது. எல்லோரும் ஓர் குலம். ஏற்றத்தாழ்வு கூடாது. தியானம் போதும்- திருவிழா வேண்டாம். இப்படியே பேசுவார்கள். மதிவாணா! இவர்களின் மண்டையில் அடிப்பது போல நமது புராதன மார்க்கத்தின் பொன்மொழிகளைக் கொண்ட கவிதா மழை பொழிய வேண்டும். [மாசிலாமணியாரிடம் விடை பெற்றுக் கொண்டு செல்கிறான் மதிவாணன்.] காட்சி-- 48 இடம்: வல்லியூரை அடுத்துள்ள காட்டில். இருப்: முத்துமாணிக்கம். வில்வக்காட்டு முரடர்கள். முத்: ஐயய்யோ ஐயோ! என்ற கூக்குரல் கேட்கிறது. நாலைந்து முரடர்கள் வருகிறார்கள். முத்துமாணிக்கத்தின் முகம் ஒரே இரத்த மயமாக இருக்கிறது. கீழே உருட்டம் பட்டிருக்கிறான், அலங்கோலமான நிலையில்.. எழுந்திருக்கவும் முடியாத நிலைமையில் முத்து மாணிக்கம் ஊர்ந்து செல்கிறான், முள்ளும் கல்லும் நிரம்பிய பாதையில்! எங்கும் நிசப்தம்... வலி தாங்கமாட்டாமல் முத்துமாணிக்கம் போடும் கூச்சல் மட்டுமே சத்தமாக இருக்கிறது. காட்சி--49 இடம்: சோமநாதன் மாளிகை -- உட்புறம் இருப்: பணியாட்கள். நிலைமை: வேலையாட்கள் கவலையுடன் உள்ளனர்.
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/94
Appearance