.98 சொர்க்கவாசல் கவி : பெருமை அடைகிறேன் அடைகிறேன் மகளே! பெருமை அடைகிறேன். (எதிர்ப்புறமிருந்து மடாலய ஆட்கள் 'அருமறை யானந்தர் வாழ்க! அருமறையானந்தர் வாழ்க! அருமறையானந்தர் வாழ்க!'என்று முழக்கமிட்ட வண்ணம், விருதுகளும் கொடிகளும் ஏந்தியபடி வருகிறார்கள்.. கவிராயரும் மகளும், ஒரு வீட்டின் படிக்கட்டிலே ஏறி நின்றுகொண்டிருக்கிறார்கள். அருள் சீட்டு உடையாரே, அரன் அருள் பெறு வாரே;பொருள் தேடி அலைவீரே, பொன்னடியை மறந்தீரே!' என்ற பதிகம் பொறிக்கப்பட்ட விளம் பரக் கொடியும்... அருள் சீட்டு உடையார், அரண்மனை உடையார்... சொர்க்கவாசல் கைங் கரியம்! இன்றே பெறுவீர் அருள் சீட்டு இகபர சுகம் தரும் அருள்சீட்டு இன்றே பெறுவீர் மெய் யன்பர்களே.. மார்க்கம் தழைக்க மாநிலம் செழிக்க அருள்சீட்டு பெறுவீர்..." என்று வித விதமாக பொறிக்கப்பட்ட விளம்பரத்தாள்களை ஏந்தியபடி மடாலயத்தவர், ஊர்வலமாக வரக் கண்டு...) கவி: புதிய திட்டம்! பார்த்தாயா? ... பூங்: ஏமாளிகள் இருக்கும் வரையில், எத்தன் இருந்து தானே தீருவான். கவி: உண்மைதான்! ஆனால், எத்தன் இருப்பதால் தானே, ஏமாளிகள் உண்டாகிறார்கள். பூங்: அதுவும் உண்மைதான். அந்த நிலையைத்தான்' நாம் போக்க வேண்டும். கவி: நிச்சயம் போக்குவோம்! காட்சி- .52 இடம்: வேழநாட்டு மடாலயத்தின் உட்புறம். இருப்: மடாதிபதிகள்.
பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/98
Appearance