உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொர்க்கவாசல், நாடகம், 1980.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொர்க்கவாசல் 99 [மடாலயத்தில் அருள்சீட்டு தயாரிக்கிறார்கள். மடாதிபதி முத்திரையிடுகிறார் சீட்டுக்களில், அருள் சீட்டுக் குவியலைக் காட்டியானதும் பிரமுகர்கள் பலரிடம் அருள்சீட்டு இருக்கும் நிலையைத் தொடர்ச்சியாகக் காட்டுவது.) [ஒருவர் கண்களில் ஒற்றிக் கொள்கிறார், அருள் சீட்டை. ஒருவர் ஒரு கத்தை அருள் சீட்டை ஒரு பேழையில் வைத்துப் பூட்டுகிறார்.] "அருள் சீட்டு உடையாரே அரனடி சேர்வார் பொருள் தேடி அலைந்தது போதும் மாந்தரே ஐயன் அருள் தேட வாரீர் இன்றே அருள் சீட்டு உடையார் அரண்மனை உடையார். [என்ற விளம்பரப் பலகைகள் பல காணப்படுகின் றன் . மடாதிபதியின் பேழை நிறைகிறது, அருள் சீட்டு குவியல் குறையக் குறைய...) அருள் சீட்டு உடையாரே! அரனடி வாரே. (என்ற ஒலி கேட்கிறது...] காட்சி-53 இடம்: வெற்றிவேலன் ஓர் கூடம். சேர் அரண்மனையில் இருப்: அமைச்சர், வெற்றிவேலன் நிலைமை: அரசன் உலவும் காட்சி. எதிரே அமைச்சர் சுவடிகளைப் பிரித் துப் பார்த்தபடி இருக்கிறார். அமை: சந்தனக்காட்டின் ஏகபோக உரிமையை, சீமான் சபாபதிக்குத் தருவதாக... (ஒரு சீட்டை மன்னன்முன் நீட்ட]